என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருத்த சிறப்பு முகாம்"
- முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர்.
- கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் தொடங்கியது. வார்டு வாரியாக வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது.ருத்ரப்ப நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 26, 27, 28, 29, 30, 31, 32 மற்றும் 33வது வார்டுகளுக்கு நடந்தது. இங்கு நாளை வரை முகாம் நடக்கிறது.
முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர். 14-ந் தேதி முதல், 17-ந் தேதி வரை சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25வது வார்டு மக்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.
தாராபுரம் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 18 முதல் 21-ந் தேதி வரை, 1, 2, 3, 4, 5, 13 மற்றும் 14வது வார்டு மக்களுக்கு நடக்கிறது. பார்க் நகராட்சி பள்ளியில்வரும் 22 முதல் 25-ந் தேதி வரை 10, 11, 12, 13, 18 மற்றும் 24வது வார்டுகளுக்கும், ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் வரும் 26 முதல், 30-ந் தேதி வரை 6, 7, 8 மற்றும் 9வது வார்டு மக்களுக்கும் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது. இதில்முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நேற்று 2-வது கட்டமாக 3,288 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. சி.எஸ்.ஜ தொழில்நுட்ப கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 22 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரம் பேரின் பெயரை நீக்க விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. இறந்துபோன மற்றும் இரட்டை பதிவாக இருக்கும் அவர்களின் பெயரை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இரட்டை பதிவு கொண்ட நபரின் பெயரை இரு இடத்திலும் நீக்கி விடுவதாக அரசியல் கட்சியினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை மிக கவனமுடன் பார்த்து ஒரு இடத்தில் மட்டும் பெயரை நீக்க வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கல்லூரியில் படிக்கும் 18 வயது நிரம்பிய மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க ஒவ்வொரு கல்லூரியிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்து வருகின்றோம். இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
இந்த ஆய்வின் போது சேலம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) ஜெகநாதன், தாசில்தார்கள் திருமாவளவன், தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்